Pages

Tuesday, January 31, 2017

கனவு #1 - ஒரு பூ சொல்லி கேட்ட கதை...!!!!

ஒரு பூ சொல்லி கேட்ட கதை...!!!!


என் செடியில் இருந்து என்னை பறித்து சென்று உனதாக்கிக்  கொண்டாய்,
என்னை ஒரு நாள் கூட வாடாமல் பார்த்து கொள்ள முடியவில்லைஉன்னால்,
என்னை நிஜமாகவே உனக்கு பிடிக்கும் என்றால் என்னை என்  செடியிடமே விட்டு விடு, தினமும் உனக்காக பூத்து மலர்கிறேன், நீயும் ரசித்து வாழ்ந்துவிடு...!!!!

பூவிடம், புரியவில்லையே என்று சொன்னேன்..!!

அது சிரித்து கொண்டே சொல்லியது..!!!

நீ உணரும் சிரிப்பு, கோபம், ஆனந்தம் ...... எந்த உணர்வும் உன்  சொந்தம் அல்ல,
அவை அனைத்தும் பிறர் மனதில் மலரும் உணர்வுகள்,
அவைகளை மலரும் தருணம் அறிந்து உணர்ந்தால் மட்டுமே உன் வாழ்க்கை வாடாமல் நீடிக்கும்..!!!
அவைகளை உனதாக்கி கொள்ள முயற்சித்தால், உன்னுடன் சில காலம் வாடாமல் இருக்கும்,
என்றோ ஒரு நாள் வாடி விடும்..!!!
என்றும் ஒருவரின் உணர்வுகளை பறிக்க நினைக்காதே..!!
அவைகளை அவரவரிடம் மலர விடு, அதுவே நிலைத்து நிற்கும்..!!! :-)






No comments:

Post a Comment