Pages

Friday, February 3, 2017

கனவு #10 - என் அன்பும் நீயே !! என் வாழ்வும் நீயே !!

என் அன்பும் நீயே !! என் வாழ்வும் நீயே !!



கருவறையில் என்னை சுமந்த போது வலியை கொடுத்தும்..!!
நான் இருட்டில் இருக்கிறேன் என்று தான் கவலை கொண்டாள்..!!!

விரல் பிடித்து நடந்த போது, என் விரல் .வலிக்காமல் இருக்க..!!
அவள் விரல் மீது என் விரல் கோர்த்து நடந்தாள்..!!!

உணவு ஊட்டும் போது உணவின் ருசி அறிந்தேன்..!!
ஊட்டும் அவள் உணர்வு அறிய மறந்தேன்..!!

நான் சிரிக்க, அவள் கண்ணீர் மறைத்தாள்..!!
இது புரியாமல் என் கண்ணீரையும் அவளிடமே கொட்டினேன்...!!
அதையும் துடைத்து என் கஸ்டம் நீக்கினாள்..!!

என்னை சுமந்த போதும் வலியை ஏற்க மறுத்தவள்..!!
இன்றும் அவள் மடியில் உறங்கும் போதும் வலியை ஏற்க மறுக்கிறாள்..!!

அம்மா..!!!

உன்னை என்னால் கருவறையில் சுமந்து நீ கண்ட வலியை காண முடியாது..!!
ஆனால் என் தோள் கொடுத்து, உனக்கு வலி கொடுக்காமல் காக்க முடியும்..!!!


No comments:

Post a Comment