இயற்கை - ஆனந்தம் !!!
ஆனந்தத்தில் எழுதியதால் சிறு கவிதை சிறுது பெரிதாகிவிட்டது...!!!
மதிய வேலை உணவு முடிந்து அலுவலகம் செல்லும் நேரம்,வெளியில் கரு மேகங்கள்..!! சிறுது தூரம் நடந்தே செல்ல வேண்டும்..!!சட்டை பையில் தொலைபேசி, காசு..!! குடை இல்லாமல் நடந்து செல்ல சிறிது யோசனை தான்..!!!
குழந்தைகள் பள்ளி விட்டு வரும் நேரமும் கூட..!!வெளியில் மழை தூரலை எட்டி பார்க்கையில்... தன்னை அறியாமல் குழந்தை ஒன்று தன் தோளில் இருக்கும் புத்தக பையை கூட மறந்து மழையில் ஆட்டம் போட்டு கொண்டிருந்தது...!!
அந்த குழந்தை முகத்தில் கண்ட ஆனந்தம், என்னை அறியாமல் நானும் மழையில் செல்ல ஆரம்பித்தேன்...!!! சிறுது தூரம் கடந்ததும், ஒன்றை உணர்ந்து கொண்டேன்..!!குழந்தைகளாய் மாறுவதால் இன்பம் கிடைத்திடாது...!! இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தால் மட்டுமே இன்பத்தை தேட முடியும்..!!!
என்னை மறந்து மழையில் ஆடிக்கொண்டு அலுவலகம் நெருங்கிவிட்டேன், மழை நின்று விட்டது..!!! முகம் லேசாக வாடியது...!!! அலுவலகம் நோக்கி நடந்தேன், மரங்களின் இலைகளில் இருக்கும் மழை துழிகளை தட்டியவாறு சென்றேன்...!!! தென்றல் காற்றும் சேர்ந்து கொண்டது என் பாதையில்...!!வான் மழை நின்றும், காற்று வீசியதால் இலைகள் ஆட மரங்களுக்கு கீழே மழை துவங்கியது..!!மீண்டும் ஆனந்தம்...!!! சிரித்தபடி வந்து விட்டேன் அலுவலகத்திற்கு...!!!
அமைதியாக உட்கார்ந்தபடி ஒன்றை நன்றாக புரிந்து கொண்டேன்..!!!
"நாம் இயற்கையை நேசித்தால், அது நம்மை அதிகலவில் நேசிக்கிறது..!!ஆனந்தம் நம் சட்டை பையில் இருக்கும் காசிலோ அல்லது தொலைபேசியிலோ அல்ல,நம்மை மறந்து, நம் மனம் போகும் பாதையில் தான் இருக்கிறது" :-) :-)
"நாம் இயற்கையை நேசித்தால், அது நம்மை அதிகலவில் நேசிக்கிறது..!!ஆனந்தம் நம் சட்டை பையில் இருக்கும் காசிலோ அல்லது தொலைபேசியிலோ அல்ல,நம்மை மறந்து, நம் மனம் போகும் பாதையில் தான் இருக்கிறது" :-) :-)

No comments:
Post a Comment