Pages

Wednesday, February 1, 2017

கனவு #6 - நீயும் !! உன் நினைவுகளும் !!

நீயும் !! உன் நினைவுகளும் !!



நீ என்னை விட்டு சென்று வருடங்கள் கடந்து விட்டன,
வருந்தி அழுத நாட்களும் ஓடிவிட்டன...!!
இன்று வருத்தமும் இல்லை, உன் மேல் கோபமும் இல்லை..!!
ஆனால் இன்றும் இரவுகள் வருகையில் கண்ணீரும் சேர்ந்து வருகிறது என்னை அறியாமல்...!!
அன்று என் காதலியாய் நினைவுகள் தந்தாய்,
இன்று காதலாய் நினைவில் இருக்கிறாய்..!!!
நேரம் கடந்தால் உன்னை மறந்து விடுவேன் என்று கூறி சென்றாய்,
நேரம் கடந்து என்னை மறந்து விட்டது..!!!
நீ என் உடல் பிரிந்து எங்கோ வாழ்ந்தாலும்,
என் உயிர் பிரியும் நேரம் உன் கண்கள் கலங்க கனவுகள் காண்கிறேன்..!!
அன்பே..!!!
இன்று புரிந்து கொள்கிறேன் ஒன்றை..!!
உன்னை மட்டும் நான் காதலிக்க வில்லை, 
நீ எனக்கு கொடுத்த நினைவுகலையும் காதலிக்கிறேன்..!!
என்றும் கண்ணீரோடு காத்திருப்பேன், 
உன் கரங்கள் என்னை அணைக்கும் வரை..!!
<3 <3 <3 <3 <3 ...!!!!
:'(



No comments:

Post a Comment