Pages

Monday, February 6, 2017

கனவு #12 - தமிழ் என் உயிர் !!





அமைதி காக்க வேண்டிய வெண்மை நிறம் இன்று அகங்காரம் கொள்கிறது, இவர்கள் வெண்மையை வேட்டி சட்டையாய் அணிந்த போது..!!

கர்வ கர்ஜனை எழுப்பும் தமிழ் இனம், இன்று கோமாளி கூச்சல் போடுகிறது இவர்கள் மேடையில் அரங்கேறியதால்..!!!

அம்மா என்ற சொல்லின் தமிழ் அர்த்தம் அழிந்தது, இந்த ஈன பிரிவுகளின் அம்மா போர்வையால்..!!

கேட்பார் இல்லை...!! கொடுப்பார் உண்டு..!! கெடுப்பாரும் உண்டு..!! இந்த நாடக மேடை, அதில் ஆடும் கூத்தாடிகள் நாம் வளர்த்த கோமாளிகள்...!!!

தமிழனாய் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது..!! கண்ணீரையும் பையில் அடைத்து  வியாபாரம் செய்யும் ஊடகங்களின் மத்தியில்..!!

எழுவேன் நிச்சயமாய்..!! தமிழனாய் உலகை ஆள்வேன்..!! சோதனைகள் ஆயிரம், அதில் வேதனைகள் பல கோடி, வீழமாட்டேன் !! வீழ்த்திடுவேன் !!

தமிழ் என் உயிர் !! தமிழர் என் மக்கள் !! தமிழ்நாடு என் தேசம் !!


2 comments: